Friday, May 21, 2010

நீ...

என் பெயரை அறிந்தவன் நீ ...
பெயருக்குள் நீ இருப்பது தெரியவில்லையா ???
என் கவிதையை ரசிப்பவன் நீ ...
ரசனைக்குரியவன் நீ என்பது புரியவில்லையா ???
என் செல்வத்தை தெரிந்தவன் நீ ...
மனதில் உள்ள ஆசைகள் அறியவில்லையா ???
என் அன்பை பெற்றவன் நீ...
அழகான  காதலை உணரவில்லையா???
என்னை சிரிக்க வைத்தவன் நீ ...
அழுகின்ற நெஞ்சம் கேட்கவில்லையா???
என் தாகத்தை தீர்த்தவன் நீ...
ஏங்க வைக்கும் பயணம் முடிவில்லையா ???
என்னை கண்டவன் நீ ...
என்னுள் இருக்கும் உன்னை காணவில்லையா ???

1 comment:

Vel Pratheesh Sankar said...

hey.....this is really awesome....