Friday, December 17, 2010

மயக்கம்

புத்தம் புது கிளையில் குருவி குடியிருக்க கண்டேன்
 அது நித்தம் இரு வேளை கவி பாட மெய் மறந்தேன்
மனம் சிந்து பாட புத்துணர்ச்சி ஊட்ட பறந்தேன்
 அதை நினைக்கும் தருணம் வர செவி சார்ந்தேன்
 

Saturday, August 14, 2010

பேசும்

என் கண்கள் பேசும் உன் பார்வையால்...
என் மௌனம் பேசும் உன் நினைவால்...
என் மனம் பேசும் உன் அன்பால்...
என் கண்ணீர் பேசும் உன் பிரிவால்...

என் எழுத்துக்கள்

 என் எழுத்துக்கள் என் வரிகள்
  மனதின் உயிர் துடிப்புகள்...
என் இதயம் சுவாசிப்பது அன்பு நினைவுகள்...
உணர்வதை எழுதுகிறேன்...
எழுவதற்காக உணர்வதில்லை...

வாழ்கிறேன்

நீ என்னை நினைக்காத போதும்
  என் நினைவுகளால்
 உன் மனம்
     என்னை நினைக்கும்
          என்ற
நம்பிக்கையில் வாழ்கிறேன் நான்   

வரிகள்

உனக்காக நான் அனுப்பும் வரிகள் உயிரோட்டமுள்ள என் இதய துடிப்புகள்...
   உனக்கு மட்டுமே சொந்தமானது...
 நீ உணர்ந்து கொண்டால் என் இதயத்துக்குள் உயிர் இருக்கும்...
    நீ தவிர்த்து கொண்டால் என் இதயத்துக்குள் உயிர் ஏங்கும்...

Tuesday, July 27, 2010

உன்னோடு

உன்னை மட்டும் நினைக்கிறன் ...
  என்னை முழுவதும் மறக்கிறேன் ...
உன் முகம் எங்கும் காண்கிறேன் ...
  என் விழி மூடியும் ரசிக்கிறேன் ...
ஒவ்வொரு நிமிடமும் பிறக்கிறேன்
புதிதாய் பூத்த பூவை போல் ...
   ஒவ்வொரு நொடியும் இறக்கிறேன்
   இறுதியாய் வாடிய பூவை போல் ...
உன் அருகாமை என் வசம் வருமா ???
   உன் மனம் என்னை நேசிக்குமா???
உன் உணர்வோடு உயிரோடு வாழ  
  " உன்னோடு "

Monday, July 12, 2010

முகம்

வெளிச்சத்தில் தெரியவில்லை என் முகம் ...
இருட்டில் தெரிகிறது அவள் முகம்
கண்ணாடியில் கனவாக .....

Monday, June 7, 2010

வாழ்க்கை

வற்றாத நதி என் கண்ணீர் !!!
கலையாத நினைவு என் கனவு !!!
பேசாத வார்த்தை என் மௌனம் !!!
புரியாத பயணம் என்  வாழ்க்கை ???







Friday, May 21, 2010

நீ...

என் பெயரை அறிந்தவன் நீ ...
பெயருக்குள் நீ இருப்பது தெரியவில்லையா ???
என் கவிதையை ரசிப்பவன் நீ ...
ரசனைக்குரியவன் நீ என்பது புரியவில்லையா ???
என் செல்வத்தை தெரிந்தவன் நீ ...
மனதில் உள்ள ஆசைகள் அறியவில்லையா ???
என் அன்பை பெற்றவன் நீ...
அழகான  காதலை உணரவில்லையா???
என்னை சிரிக்க வைத்தவன் நீ ...
அழுகின்ற நெஞ்சம் கேட்கவில்லையா???
என் தாகத்தை தீர்த்தவன் நீ...
ஏங்க வைக்கும் பயணம் முடிவில்லையா ???
என்னை கண்டவன் நீ ...
என்னுள் இருக்கும் உன்னை காணவில்லையா ???

Thursday, May 20, 2010

கண் எதிரே வருவதெல்லாம்
கண் மூடி பார்க்கிறேன்!!!
காணாத இடத்தில் இருப்பவனை
கண் முன்னே காண்கிறேன் !!!