மறந்தாலும் முடியவில்லை வாட்டுகிறது அவன் நினைவு !!!
நினைவே அவனிடம் சொல்வாயா உயிரில்லாமல் வாழ்கிறேன் என்று !!!
நினைத்தாலும் முடியவில்லை மறக்கிறது அவன் மனம் !!!
மனமே திருடிய இதயத்தை பறித்து வருவாயா அவனிடமிருந்து !!!
வாழாமல் முடியவில்லை தவிக்கிறது அவன் பிரிவு !!!
கண்ணே என்னையும் அவன் விழிகளோடு சேர்ப்பாயா என்று !!!
வெறுக்கவும் முடியவில்லை நினைக்கிறது அவன் நேசம்
அன்பே உன் நிழலிலாவது அனுமதிப்பாயா வாழ்வதற்கு !!!
சாகவும் முடியவில்லை பயணிக்கிறது அவன் காதல் !!!
கனவே அவனிடம் சொல்வாயா என் கனவே அவன் தன் என்று !!!
3 comments:
Not bad
Hmm romba love ha iruku intha kavidhai...
மிகவும் அருமையான வரிகள் 👌சகோ
Post a Comment